தெலுங்கானா மாநில ஆளுநராக பதவி ஏற்க
உள்ள தமிழக சகோதரி திருமதி தமிழிசை
சவுந்தரராஜன் அவர்களுக்கு தமிழக மக்கள்
சார்பில் மனம் நிறைந்த வாழ்த்துக்களை
தெரிவித்து இந்த கவிதையை சமர்ப்பிக்கிறது
எஸ் டிவி தமிழ் குழு.
தமிழரின் பெருமையை,
தரணி எங்கும் பறைசாற்ற
தாமரை தலைவியாய்,
தன்னம்பிக்கையின் முதல்வியாய்
சுந்தர தெலுகினிற்கு,
சுதந்திர பறவை போல்,
சுடர்விட்டு ஒளிவீசிட
வங்கத்தமிழ் வையகம் வாழ்த்தி,
வானுயற் பல வெற்றிகளோடு
வானளாவ உயர்ந்து நிற்க,
வந்தவளோ இந்த தங்க தமிழிசை!
~எஸ் டிவி தமிழ் குழு.
No comments:
Post a Comment