Monday, April 29, 2019

இன்றைய செய்திகள் 29.04.2019

செய்தி சுருக்கம்:

இன்று காலை பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்களைவிட மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றனர்.  அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

4 தொகுதி சட்டசபை இடைதேர்தலில் தே மு தி க, அ தி மு க-வுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திரு. விஜயகாந்த் அவர்கள் அறிவிப்பு.

சென்னையிலிருந்து  910கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள  ஃபானி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர  புயலாக மாறும்.  மே-1 தேதி முதல் இந்த புயல் வடகிழக்கு திசையை நோக்கி நகரும்.  அடுத்து வரும் 4 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நாளை 70 கிமீ வேகத்தில் புயல் காற்று வீசும்.

இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களை தொடர்ந்து அரசு முக்கிய பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டன.  மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக யாரும் இன்றுமுதல் பர்கா (முகத்திரை) அணியக் கூடாது என இலங்கை அதிபர் உத்திரவிட்டுள்ளார்.


தென் இந்திய திரைப்பட  தயாரிப்பாளர் சங்கத்தில் ருபாய் 7 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாகவும் மற்றும் சங்கத்தில் பல்வேறு முறை கேடுகள் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் சங்கத்தை நிர்வகிக்க திரு. சேகர் என்கிற தனி அதிகாரியை தமிழக அரசு நேற்று நியமனம் செய்யப்பட்டதை அடுத்து இன்று அவர்  தெ. தி. த. சங்கத்தின் தனி அதிகாரியாக பொறுப்பேற்றார்.

தங்கம் விலை இன்று  ருபாய் 40/- குறைவு.   ஒரு கிராம் தங்கம் - ருபாய் 3050/-ம், எட்டு கிராம் தங்கம் - ருபாய் 24400/-ம் ஆக இருந்தது.